மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது

வேலூர்: பரமக்குடி டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் ஜாபர் சித்திக். 2020ம் ஆண்டு குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடியாக டிஎஸ்பி பதவி பெற்றார். திருவிடைமருதூர், அரக்கோணம் டிஎஸ்பியாக பணியாற்றியுள்ளார். இவருக்கு, பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி புகார் அளித்திருந்தார். தன்னை சித்ரவதை செய்வதாகவும் டிஜிபியிடம் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

அதன்பேரில், டிஎஸ்பி ஜாபர் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மனைவி அளித்த வன்கொடுமை புகாரில் ஜாபர் சித்திக் சிபிசிஐடி போலீசாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டிஎஸ்பி ஜாபர் சித்திக் மீதான அவரது மனைவியின் புகார் குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement