காலாவதி மருந்து விற்பனை செய்த வழக்கு :துருக்கியிலிருந்து லேபிள் வாங்கியது அம்பலம்
பெங்களூரு: காலாவதியான மருந்துகள் விற்பனை செய்த வழக்கில் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளில் இருந்து, லேபிள்களை வாங்கியது அம்பலமாகியுள்ளது.
பெங்களூரு தெற்கு மாவட்டம், தாவரகெரே அருகே தொட்டேரி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் போலி மருந்து, மாத்திரைகள் தயாரிக்கப்பட்டன. கடந்த மாதம் அந்த வீட்டில் கர்நாடக மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது, காலாவதியான மருந்து, மாத்திரைகளை புதிய மருந்து, மாத்திரைகள் போல மாற்றி, பிரபல மருந்து நிறுவனமான, 'பைசர்' நிறுவனத்தின் லேபிள்களை ஒட்டி, விற்பனை செய்தது தெரிந்தது. அங்கிருந்த, 5 கோடி ரூபாய் மதிப்பிலான போலி மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில், 'க்ரூபா ஹெல்த்கேர்' என்ற பார்மசியின் உரிமையாளர் வீரேஷ்குமார் ஜெயின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கை எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது. கடந்த மாதம் 28ம் தேதி வழக்கின் முக்கிய நபரான பிரசாந்த் ரஞ்சன்பாபு கைது செய்யப்பட்டார். அவரை தங்கள் காவலில் எடுத்து எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். விசாரணையில் பரபரப்பு தகவல்க ள் வெளியாகியுள்ளன.
பைசர் நிறுவனம் தயாரிக்கும் மருந்து, மாத்திரைகள் மீது பைசர் நிறுவனத்தின் பெயர்களை ஒட்டும் லேபிள்கள், ஆசியா கண்டத்தில் உள்ள துருக்கி நாட்டில் தயாரிக்கப்படுகிறது.
இதுபற்றி அறிந்த பிரசாந்த் ரஞ்சன்பாபு, துருக்கிக்கு அடிக்கடி சென்று இடைத்தரகர்கள் மூலம், பைசர் நிறுவனத்தின் லேபிள்களை வாங்கி வந்து, பண்ணை வீட்டில் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் மீது ஒட்டியுள்ளார்.
ஓராண்டில், 10 முறைக்கு மேல் துருக்கி சென்று வந்ததால், பிரசாந்த் ரஞ்சன்பாபு விசாவை, துருக்கி நாட்டின் அரசு ரத்து செய்தது. இதனால் அவர், அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று, அங்கிருந்து லேபிள்களை வாங்கி வந்ததும் போலி மருந்து, மாத்திரைகளை விற்று, ஆண்டிற்கு 15 கோடி ரூபாய் வரை அவரும், கூட்டாளிகளும் லாபம் பார்த்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும்
-
என்றென்றும் நிலைத்திருக்கும் வரலாறு: மெஸ்ஸியின் ஓய்வு குறித்து இன்ஸ்டாவில் ரொனால்டோ பதிவு
-
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு; எலான் மஸ்க்கிற்கு மத்திய அரசு பதில்
-
சவுதி அரேபியாவில் விமான நிலையங்கள் மீது தாக்குதல்; இந்தியா கடும் கண்டனம்
-
உலக முதியோர் தின விழா
-
சாலையோரம் சென்ற பச்சோந்தி நிறம் மாறுவதை கண்டு வியந்த மக்கள்
-
மொபைல் ஹேக் செய்து ரூ.2.95 லட்சம் மோசடி