மொபைல் ஹேக் செய்து ரூ.2.95 லட்சம் மோசடி
புதுச்சேரி: முத்துப்பிள்ளைபாளையத்தில் பெண்ணின் மொபலை ேஹக் செய்து ரூ.2 லட்சத்து, 95 ஆயிரம் மோசடி செய்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முத்துப்பிள்ளைபாளையம் விநாயகமூர்த்தி மனைவி உமாமகேஸ்வரி,43. நேற்று முன்தினம் உமாமகேஸ்வரியை தொடர்பு கொண்ட மர்ம நபர் பொதுத் துறை வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். பின், உங்கள் மொபைல்போனிற்கு ஒரு லிங்க் வரும் அதை கிளிக் செய்யுமாறு கூறியுள்ளார்.
உமாமகேஸ்வரி அந்த லிங்கை தொட்ட உடன், அவரது மொபைல்போன் ேஹக் செய்யப்பட்டது. தொடர்ந்து, மொபைல்போன் மூலம் அவரது வங்கி கணக்குகளில் இருந்து பல்வேறு தவனைகளாக ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உமாமகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாட்டை சீர்குலைக்க சதித்திட்டம்; நிதின் நபின் குற்றச்சாட்டு
-
டில்லியில் இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?
-
அதிமுக தங்களை சுயபரிசோதனை செய்ய வேண்டும்; சொல்கிறார் அன்புமணி
-
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா... தவெகவுக்கு வெற்றியில் தோல்வி என ஸ்டாலின் பேட்டி
-
வார இறுதி நாளில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Advertisement
Advertisement