அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு; எலான் மஸ்க்கிற்கு மத்திய அரசு பதில்

1

புதுடில்லி: இந்தியாவில் ஸ்டார்லிங் இணையசேவையை அறிமுகம் செய்வதை, சில செல்வந்தர்கள் தடுப்பதாக ஸ்டார்லிங் நிறுவனர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியிருந்தார். இது தொழில்நிறுவன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் கூறியதாவது; இந்தியாவில் சேட்காம் எனப்படும் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டம் பாரபட்சமின்றியும், நியாயமான முறையிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, ஸ்டார்லிங்க் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கான தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. பயனாளிகள் மற்றும் அவர்களின் தரவுகள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மதிப்பீட்டு பணிகள் நடந்து வருகிறது.

செயற்கைக்கோள் மூலம் இணையசேவை வழங்க உரிமம் பெற்ற 3 நிறுவனங்களுக்கும் தரவு பாதுகாப்பு மதிப்பீடு ஒரே நிலையில் தான் இருக்கிறது. பாதுகாப்புச் சோதனை செயல்முறை நிறைவடைந்த பிறகே, அலைக்கற்றை ஒதுக்கீட்டை கோர முடியும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement