உலக முதியோர் தின விழா
கடலுார்: கடலுார் கே.என்.பேட்டை அன்னை அலமேலு முதியோர் இல்லத்தில் உலக முதியோர் தின விழா நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, முதியோர்களுக்கான அரசின் திட்டங்கள் குறித்து பேசி, முதியோர்களுக்கு கிரீடங்கள், பொன்னாடை அணிவித்தார். எம்.என்.டி.என்., இயக்குநர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமதி வரவேற்றார். விழாவில், ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், டாக்டர் தமிழமுதன், வழக்கறிஞர் பிரபா, அழகர் தேவநேசன், சென்ட்ரல் அரிமா சங்க மண்டல தலைவர் உமா சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். முதியோர் இல்ல கண்காணிப்பாளர் ஆண்டாள் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement