என்றென்றும் நிலைத்திருக்கும் வரலாறு: மெஸ்ஸியின் ஓய்வு குறித்து இன்ஸ்டாவில் ரொனால்டோ பதிவு

புதுடில்லி: சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தனது கால்பந்துப் போட்டியாளரான லியோனல் மெஸ்ஸிக்கு, கிறிஸ்டியானோ ரொனால்டோ இணையத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரல் ஆகி உள்ளது.

தனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையின் இறுதி ஆட்டத்தில், மானுமென்டல் மைதானத்தில் பெனின் அணிக்கு எதிராக அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி சிறப்பாக விளையாடினார். ஆட்டம் முடிந்ததும், மெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டார்.

அந்த பதிவில், என்னிடம் இருந்த அனைத்தையும் நான் கொடுத்துவிட்டேன்; இதற்கு மேல் என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. மேலும், எனக்குப் பின்னால் பல சிறந்த இளம் வீரர்கள் உருவாகி வருகிறார்கள், அவர்கள் இந்த இடத்தில் விளையாட தகுதியானவர்கள். வேறு சில அத்தியாயங்கள் முடிவுக்கு வரும் நேரம் இது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவிற்கு மிக்க நன்றி. இனி நானும் உங்களில் ஒருவனாக மாறி, வெளியில் இருந்து மைதானத்தில் இருக்கும் நமது வீரர்களை உற்சாகப்படுத்துவேன்.

எண்ணற்ற மறக்க முடியாத நினைவுகளுடனும், பெருமையுடனும் இங்கிருந்து விடைபெறுகிறேன். என்னை அர்ஜென்டினாவாகப் பிறக்க வைத்ததற்காக கடவுளுக்கு நன்றி. வாழ்க அர்ஜென்டினா என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்து, கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியிட்ட பதிவில், “லியோ, பல ஆண்டுகளாக உங்கள் நாட்டை காப்பற்றி உள்ளீர்கள்; அந்த வரலாறு எப்போதும் நிலைத்திருக்கும்.

நீங்கள் ஆர்ஜென்டீனாவிற்காக சாதித்தவற்றுக்கு எப்போதும் என்னிடம் அதற்கான மரியாதை இருக்கும்” எனக் கூறி இருந்தார். இந்த கமெண்டிற்கு மட்டுமே 30 லட்சம் லைக் கிடைத்துள்ளது.

Advertisement