பைனலில் ஈஸ்ட்மேன் - சி.ஆர். கார்மென்ட்ஸ்
திருப்பூர்: நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் வெற்றி பெற்ற ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ், சி.ஆர். கார்மென்ட்ஸ் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி நிறுவன அணிகளுக்கு இடையேயான நிப்ட்-டீ பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 24 அணிகள் பங்கேற்ற தொடரில், லீக் போட்டிகளின் முடிவில் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இதில் வெற்றி பெற்ற ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்ரீ லட்சுமி அப்பேரல்ஸ், சி.ஆர். கார்மென்ட்ஸ், ராம்ராஜ் காட்டன் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
நேற்று நடந்த முதல் அரையிறுதியில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ்-ஸ்ரீ லட்சுமி அப்பேரல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஈஸ்ட்மேன் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. நாகராஜன் 37 பந்துகளில் 49 ரன் எடுத்தார். தொடர்ந்து ஆடிய ஸ்ரீ லட்சுமி அப்பேரல்ஸ் அணி, 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 86 ரன்னில் ஆட்டமிழந்தது. 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஈஸ்ட்மேன் பவுலர் அஜித், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மற்றொரு அரையிறுதியில் சி.ஆர். கார்மென்ட்ஸ்-ராம்ராஜ் காட்டன் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சி.ஆர். கார்மென்ட்ஸ் அணி, 8 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்தது. அடுத்து ஆடிய ராம்ராஜ் காட்டன் அணி, 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்னில் ஆட்டமிழந்தது. 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சி.ஆர். கார்மென்ட்ஸ் பவுலர் ஆல்பிரட், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அரையிறுதியில் வெற்றி பெற்ற ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ், சி.ஆர். கார்மென்ட்ஸ் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. வரும் 11-ம் தேதி காலை, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஸ்ரீ லட்சுமி அப்பேரல்ஸ்-ராம்ராஜ் காட்டன் அணிகள் மோதுகின்றன. அன்று மதியம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ்-சி.ஆர். கார்மென்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
முதலிடம் பெறும் அணிக்கு நிப்ட்-டீ பிரீமியர் லீக் சுழற்கோப்பையுடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு கோப்பையுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. மூன்றாவது, நான்காவது இடம் பெறும் அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
நிப்ட்-டீ பிரீமியர் லீக் அரையிறுதிப்போட்டியில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - ஸ்ரீலட்சுமி அப்பேரல்ஸ் அணிகள் மோதின.
@block_B@
நுழைந்தது எப்படி
ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி
ஈஸ்ட்மேன் - 143/6 (20 ஓவர்)
ஸ்ரீ லட்சுமி அப்பேரல்ஸ் - 86/10 (18.2 ஓவர்)
ஆட்டநாயகன்: அஜித் (4 விக்கெட்)
சி.ஆர். கார்மென்ட்ஸ் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி
சி.ஆர். கார்மென்ட்ஸ் - 123/8 (20 ஓவர்)
ராம்ராஜ் காட்டன் - 96/10 (19 ஓவர்)
ஆட்டநாயகன்: ஆல்பிரட் (3 விக்கெட்)block_B
மேலும்
-
'மக்களின் நம்பிக்கை, அன்புக்கு சான்று': பிரதமர் மோடிக்கு கமல் பாராட்டு
-
தேசியம் பகுதி:அனைத்திலும் தோல்வி!
-
கடன் சுமை இருந்தாலும் சிறப்பான ஆட்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
-
ரோலர் ஸகேட்டிங் போட்டி வீனஸ் பள்ளி மாணவர் முதலிடம்
-
17 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
-
இலக்கை தாண்டி விண்ணப்பம் வந்தாலும் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மானியம்: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்