'மக்களின் நம்பிக்கை, அன்புக்கு சான்று': பிரதமர் மோடிக்கு கமல் பாராட்டு
சென்னை: அரசு பதவியில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடியை பாராட்டி, ராஜ்யசபா எம்பியும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:
அரசு பதவிகளில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். அரசு பதவியில் 25 ஆண்டு என்பது அனைத்திற்கும் மேலாக மக்களின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் ஒரு சான்று.
70 ஆண்டுகால எனது பொது வாழ்க்கையானது மக்களின் அன்பு, நம்பிக்கையால் நிலைநிறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு முதல்முறையாக ராஜ்யசபா எம்பி ஆக பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடியை சந்தித்தேன். முதல்முறை எம்பி ஆன எனக்கு பெருந்தன்மையுடன் நேரம் ஒதுக்கினார். எங்கள் அரசியல் சார்புகளை கடந்து இந்தியாவுக்கான எனது நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் குறித்தும், வலிமையான தேசத்தையும் வருங்கால சந்ததியினருக்கான சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்குவதற்கான கடமை குறித்து கலந்துரையாடினோம். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பிரதமரிடம் பேசினேன் எனகிறீர்களே, நீங்கள் பேசியது ஏதாவது அவருக்கு புரிந்த்தா என்பதைச் சொல்லவும்.
வயிறு இருக்கில்லே, பசிக்கும் இல்லே பொழைக்கிற வழியை பாக்குறேன்.
Modi should beware of this multi tongued personality.He said hindu is the first terrorist. Saffron is not my colour.
புதிய பணிக்கு நடிகர் திலகத்தை தீம்க்கா அனுப்பியிருக்கிறது. டார்ச் லைட்டை ஆப் செய்து விட்டார்கள் போல.
DMK ambassador
திரா விஷங்களுக்காக தூது போய் இருப்பாங்க... கம்யூனிஸ்ட் ம் கை கழுவிடுச்சு... காங்கிரஸூம் கை விட்டுருச்சு.. வி. சி. க. வும் விடைபெறுகிறேன் என போய்டுச்சு இனி என்ன செய்றதுனு தெரியல... ஆகையால்.. இந்த உலக மகா நடிகனின் நடிப்பு ஆரம்பம்...
ஏதாவது வேலை ஆகனுமா.
இவர் தானே இந்தியாவில் இருக்க பிடிக்கலன்னு கதை விட்ட காமஹாசன்
இவர் ஒரு தற்குறி. இந்த படத்தை சற்றே கவனியுங்கள். மோடி இவர் ஆபீஸ் க்கு வந்தது போல கைகளை
மேஜையில் இவர் வைத்திருக்கிறார்
ராஜ்ய சபா எம்.பி பதவியை, கமல் அவர்கள், திமுகவில் பதவியில் இல்லாத எம்.எல்.ஏ யாருக்காவது விட்டு கொடுக்கலாமே.
25 வருடம் மக்கள் நம்பிக்கையை நிலை நிறுத்தி மக்களால் தரப்பட்ட பதவிகள் முதல்வர், பிரதமர். அவரை கமல் பாராட்டுவது சரிதான். ஒரு எம்பி பதவிக்காக, முன்பு ஆட்சி செய்த கொள்ளை கூட்டத்திற்கும் வக்காலத்து வாங்கி, அவர்களோடு கூட்டணி செய்து, இந்த ஆட்சி நாட்டிற்கு தேவை என்று சொன்னதாக நியாபகம். இவர் என்ன டிசைனோ தெரியவில்லையே.