ரோலர் ஸகேட்டிங் போட்டி வீனஸ் பள்ளி மாணவர் முதலிடம்

சிதம்பரம்: மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார்.

கடலுாரில் நடந்த மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில், பல்வேறு பள்ளிகளில் இருந்து நான்கு முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர்

இதில் சிதம்பரம், வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மாணவன் விக்னேஷ்வரன் நான்கு பிரிவுகளின் கீழ் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

சாதனை படைத்த மாணவர் மற்றும் அவரது பயிற்சியாளரையும் பள்ளி தாளாளர் குமார் பாராட்டி வாழ்த்தினார். பள்ளி முதல்வர் லியோ பெஸ்கி ராவ் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்

Advertisement