ரூ.8.19 லட்சம் மோசடி வழக்கில் பெண் கைது
ராமநாதபுரம்: முதியவரிடம், 8.19 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், மேலும், பெண் ஒருவரை, போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், நேரு நகரைச் சேர்ந்த, 64 வயதான முதியவரை, மொபைல் போனில் தொடர்புகொண்ட நபர், 'ஆவின் பால் பூத் நடத்தினால், நிரந்திர வருவாய் கிடைக்கும்' என, கூறினார். நம்பிய முதியவர், 8.19 லட்சம் ரூபாயை செலுத்தி, ஏமாந்தார்.
புகாரில், ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார், மோசடியில் ஈடுபட்ட திருச்செந்துாரைச் சேர்ந்த சுரேஷ்குமார், 48, அவரது மகன் ரிஷி கார்த்திக், 18, ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் மோசடி செய்த பணத்தை, துாத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த கிறிஸ்டிமா, 31, என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரையும் போலீசார், நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement