அகில இந்திய தொழில் தேர்வில் பங்கேற்க விண்ணப்பம் வரவேற்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அகில இந்திய தொழில் தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 2027ம் ஆண்டு ஜூலை மாதம் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனி தேர்வர்களாக பங்கேற்க தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்ப படிவம், முழு விபரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு, தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதலை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு கட்டணம் 200 ரூபாய் www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளம் வழியாக இ–சலான் மூலம் செலுத்தி பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களோடு விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதனிலை தேர்வுக்கான எழுத்து தேர்வு வரும் நவம்பர் 26ம் தேதி கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது. இந்த தேர்வில் வெல்வோருக்கு மட்டும் செய்முறை தேர்வு மறுநாள் 27ம் தேதி நடக்கிறது.

இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தனித்தேர்வராக தேர்வெழுத வரும் 9ம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement