2 ஆண்டுகளாக அகற்றப்படாத கான்கிரீட் கழிவு

சவுரிபாளையம்: கருணாநிதி நகரில் 2009ல் கட்டப்பட்ட மாநகராட்சி பூங்கா முறையாக பராமரிப்பதில்லை. புதர்மண்டி, சிறுவர் விளையாட்டு திடல் சேதமடைந்துள்ளது. 2024ம் ஆண்டு சாக்கடை அமைக்கும் பணி நடந்தது. இதற்காக தோண்டப்பட்ட கான்கிரீட் மற்றும் சாக்கடை கழிவுகளை பூங்காவில் கொட்டினர். இதுவரை அகற்றவில்லை.

அப்பகுதியினர் மாநகராட்சி கமிஷனர், கவுன்சிலரிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. பூங்கா முழுவதும் மணலும், கற்களும் நிறைந்துள்ளன. கழிவுகளை அகற்றி, மக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்காவை மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement