பிங்க் துணி சுற்றி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
கோவை: அக்., மாதம் முழுவதும் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனையின் நுழைவாயில் கட்டட துாண்கள், மரங்களில், பிங்க் நிறத்தை அடையாளப்படுத்தும் வகையில் துணிகள் கட்டப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு மார்பக பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து விளக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனை மருத்துவ புற்றுநோய் பிரிவு டாக்டர் பிரபாகரன் கூறுகையில்,'' இம்மாதம் முழுக்க, கருத்தரங்கு, பேரணி, துண்டு பிரசுரங்கள் வழங்கி, மருத்துவமனைக்குள் வருவோருக்கு, இப்புற்றுநோய் குறித்த சந்தேகங்கள் விளக்கப்படும். வலியுள்ள, வலியில்லாத கட்டிகள் இருந்தாலோ, மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தாலோ, தயங்காமல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
5 பவுன் செயின் திருட்டு: யுடியூபர் மீது வழக்கு
-
காங்கோ ஆற்றில் படகுகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பலி
-
அசாமில் இருந்து வங்கதேசத்துக்கு முதலாவது சர்வதேச சரக்கு சேவை
-
தினமும் ரூ.3,000 நஷ்டம்: தனியார் பஸ் உரிமையாளர்கள் வேதனை
-
அவிநாசி சாலையில் தினமும் அரங்கேறும் விபத்துகள்: அக்கறை இல்லாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்
-
மதுக்கடைகளை பாதுகாப்பதை விட மலைகளை பாதுகாப்பது முக்கியம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
Advertisement
Advertisement