வாடகை வழங்காததால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாறும் மாவட்ட சுகாதார அலுவலகப் பொருட்கள்: நிதி ஒதுக்காத அவலத்தால் சிகிச்சைப் பணிகள் பாதிப்பு
பழநி: பழநியில் மாவட்ட சுகாதார அலுவலக கட்டுவதற்கு கொடைக்கானல் ரோட்டில் இடமிருந்தும், நிதி ஒதுக்காத நிலையில், தற்போது வாடகை வழங்க முடியாத அவலத்தால், சுகாதார அலுவலகப் பொருட்கள், நெய்க்காரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பழநியில் மாவட்டத்தில் 2வது மாவட்ட சுகாதார அலுவலகம் இயங்குகிறது. இதன் கீழ் வேடசந்துார், வடமதுரை, குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், தொப்பம்பட்டி, பழநி உள்ளிட்ட வட்டாரங்களின் சுகாதாரப் பணிகள் கண்காணிக்கப்படுகின்றன. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 35 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. 112 டாக்டர்களும், 700க்கும் அதிகமான மொத்தப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். பழநி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் மட்டும் 43 பேர் பணியில் உள்ளனர்.
2023ல் பழநி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு புதிய கட்டடங்கள் கட்ட, அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் அங்கு செயல்பட்டு வந்த பழநி சுகாதார துணை இயக்குனர் அலுவலகம், 2025ல் பழநி காந்தி ரோட்டில் உள்ள பழைய நகராட்சி கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம், பழநி மாவட்ட சுகாதார அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது.
பழநி மாவட்ட மாவட்ட சுகாதார அலுவலகம் கட்ட கொடைக்கானல் ரோடு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்காத காரணத்தால் கட்டடப் பணிகள் துவங்கப்படாமல் உள்ளன. மேலும் பழநி பழைய நகராட்சி கட்டடத்தில் போதுமான கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலும், கடந்த 10 மாதங்களாக வாடகை செலுத்தாத நிலையில் அதனை காலி செய்து மாவட்ட சுகாதார அலுவலகம் வேறு இடத்திற்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இடம் இருந்தும் கட்டடம் இல்லாத நிலையில் நெய்க்காரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட சுகாதார அலுவலக பொருட்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. ஏழு வட்டாரங்களில் இருந்து வரும் அலுவலர்கள் பழநியை மையமாக செயல்படும், மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு வர 9 கி.மீ., துாரத்தை தாண்டி நெய்க்காரபட்டி வரை வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பணியாளர்கள் மருத்துவ அலுவலர்களுக்கு சிரமமும், கூடுதல் போக்குவரத்து செலவினங்களும் ஏற்படுகின்றன. மாவட்ட சுகாதார அலுவலகம் கட்டுமானத்திற்கான நிதியை உடனடியாக ஒதுக்க, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு, மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்க, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
ஓமன் துணை விமானியை விமானத்தில் அனுமதித்து இருக்கக்கூடாது: அமெரிக்க துணை அதிபர்
-
தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக கோரி பேரணி; டில்லியில் ராகுல், பிரியங்கா கைது
-
ரஷ்யாவில் பிளேக் நோய் தொற்று பரவும் அச்சம்; கிருமி பரவுவது எப்படி?
-
விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல் சேவையை துவங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்; சிறப்புகள் ஏராளம்!
-
ராகுலும், சோனியாவும் ஓட்டு திருட்டின் மூலமா எம்பிக்களாக ஆனார்கள்; பாஜ கேள்வி