தெரு மின் விளக்குகள் பழுது சீரமைக்க கோரிக்கை
வேப்பூர்: தெரு மின் விளக்குகள் பழுதடைந்ததை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பூர் அடுத்த சமத்துவபுரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள, தெரு மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாக முன் பழுதடைந்ததை தொடர்ந்து சீரமைக்காததால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது. அப்பகுதியில், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளதால், இரவில், வேலை முடிந்து வீட்டிற்கு திரும்புவோர் அச்சத்துடன் வருகின்றனர். இதனை பயன்படுத்தி, சமூக விரோதிகள் சிலர் போதை பொருட்களை மாற்றும் இடமாக இரவில் பயன்படுத்துகின்றனர். எனவே, சமத்துவபுரத்தில் பழுதடைந்த தெரு மின் விளக்குகளை சீர்மைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement