குத்துச்சண்டை போட்டி: கோல்டன் கிளப் அபாரம்
திருப்பூர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி, திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட குத்துச்சண்டை சங்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியை திருப்பூர் மாவட்ட குத்துச்சண்டை சங்கத் தலைவர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். கோல்டன் கிளப் அணியினர் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு கார்த்திகேயன் கோப்பையை வழங்கி பாராட்டினார்.
மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை மாவட்ட குத்துச்சண்டை சங்கத் தலைவர் கார்த்திகேயன் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement