அம்ரித் பாரத் ரயில் இயக்கம் மாற்றம்
திருப்பூர்: கோவையில் ரயில் தண்டவாள பராமரிப்புப்பணி நடைபெறுவதையொட்டி, திருப்பூரில் இருந்து கோவை செல்லும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 7-ம் தேதி சென்னை எழும்பூர்–மங்களூரு வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (16159), திருப்பூரில் இருந்து கோவை ஜங்ஷன், பீளமேடு, கோவை வடக்கு ரயில் நிலையங்களுக்கு செல்லாமல், இருகூர்–போத்தனுார் வழியாக மங்களூரு செல்லும்.
தன்பாத்–போத்தனுார் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (16620), திருப்பூரில் இருந்து இருகூர் வழியாக போத்தனுார் சென்றடையும். கோவை ஜங்ஷன் செல்லாது.
திப்ரூகர்–கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504), இருகூர்–போத்தனுார் வழியாக திருவனந்தபுரம் செல்லும்.
ஆலப்புழா–தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), போத்தனுார்–இருகூர் வழியாக திருப்பூர் வந்தடையும். இந்த ரயில் வரும் 7, 8-ம் தேதிகளில் கோவை ஜங்ஷன் செல்லாது என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
17 அடி உயரத்தில் பறந்த இண்டிகோ விமானத்தை மின்னல் தாக்கியது; அவசர தரையிறக்கம்
-
மீண்டும் பிளேக் பீதி? 'எல்லாம் வதந்தி' என்கிறது ரஷ்யா
-
8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்கிறார் டிரம்ப்: நோபல் பரிசுக்கு மீண்டும் குறி
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது: பதுங்கு குழி தகர்ப்பு; ஆயுதங்கள் பறிமுதல்
-
வட மாநில தொழிலாளர்களுக்கு எளிதாக புரிய ஹிந்தியில் தகவல் தருவதில் தவறு இல்லை: தொழில் துறையினர் கருத்து
-
ராகுல் சந்திப்பை தவிர்க்கும் விஜய்; பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பு