பூசம் நட்சத்திர வழிபாடு

திருப்பூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில், பூசம் நட்சத்திர வழிபாடு உட்பட, முப்பெரும் விழா நடந்தது. சங்க தலைவர் நீறணி பவளக்குன்றன் தலைமை வகித்தார். திருவருட்பா அகவல் பாராயணம் செய்யப்பட்டது. செயலாளர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பூசம் நட்சத்திர வழிபாட்டின் சிறப்பு உள்ளிட்டவை குறித்து நாராயணசாமி பேசினார். ஒளி வழிபாடு செய்யப்பட்டது. பசியாற்று வித்தல் நடந்தது. ஏற்பாடுகளை செல்வகுமார்,ராமராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement