ஓமன் துணை விமானியை விமானத்தில் அனுமதித்து இருக்கக்கூடாது: அமெரிக்க துணை அதிபர்

6

வாஷிங்டன்:

இந்திய விமானி ஸ்மிட் மச்சாரை தாக்கிய ஓமன் துணை விமானி அல் ஹம்மாமி பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஓமனில் அவர் பிறந்தாலும், சிரியா உள்ளிட்ட நாடுகளில் அவர் வசித்தவர். அவரது இணைய செயல்பாடுகளை ஆராய்ந்த ஓமன் அதிகாரிகள், அவரை விமானியாக செயல்பட தடை விதித்தனர். ஆனால், அவர் வேறு நிறுவனத்தில் இணைந்தபோது அவரின் செயல்பாடுகள் பற்றி தெரிவிக்கப்படவில்லை. குறிப்பாக ஓமன் அதிகாரிகள் பிளை துபாய் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கவலை தெரிவித்தனர். மேலும், பிளைதுபாய் நிறுவனமும் அல் ஹம்மாமியின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளவில்லை என குற்றச்சாட்டப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியதாவது: அல் ஹம்மாமி பிரச்னைக்குரிய நபர். அவர் அமெரிக்க உளவுத்துறையை சேர்ந்தவர் அல்ல. முந்தைய கால நடவடிக்கைகளை ஆராய்ந்தால், அவரை விமானியாக பணியாற்ற அனுமதித்து இருக்கக்கூடாது. விமானங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள நபர்களை விமானங்களை இயக்க அனுமதிக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய அமெரிக்காவின் நடைமுறைகளை ஆராய்ந்து வருகிறோம்.

அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு விமானிகளை கவனிக்க வேண்டும். அவர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமா என சிந்திக்க வேண்டும்.

பிளை துபாய் சம்பவத்தில் ஈரானின் பங்கு குறித்து உறுதியான ஆதாரம எதையும் நான் காணவில்லை. அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் முடிவுக்கு விட்டு விடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement