அவிநாசி சாலையில் தினமும் அரங்கேறும் விபத்துகள்: அக்கறை இல்லாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்
மேட்டுப்பாளையம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனப் போக்கால், அவிநாசி சாலையில் தினமும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்துகளில், இருவர் உயிரிழந்தனர்; ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேட்டுப்பாளையம் -- அவிநாசி வரை உள்ள, 36 கி.மீ., இரு வழிச்சாலையை, நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் கடந்த நான்கு மாதங்களாக விரிவாக்க பணிகள் நடைபெறாமல் உள்ளன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் மேட்டுப்பாளையம் அவிநாசி சாலையில், தினமும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் தகவல் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளாததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அன்னுார் சாலையில் உள்ள டேங்க் மேடு பகுதி மக்கள் கூறியதாவது:
மேட்டுப்பாளையம் -- அவிநாசி சாலை, கடந்த இரண்டு ஆண்டுகளாக நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.
இதில் டேங்க் மேட்டில் இருந்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை வரை, மூன்று இடங்களில் புதிதாக கான்கிரீட் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. டேங்க் மேட்டிலும், காபி ஒர்க்ஸ் பஸ் நிறுத்தம் ஆகிய இரண்டு இடங்களில் கட்டியுள்ள புதிய பாலங்களில் தான் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கான்கிரீட் பாலத்துக்கும், தார் சாலைக்கும் இடைவெளியில் சிறிய பள்ளம் உள்ளது. அப்பள்ளத்துக்கு, சிமென்ட் கலவையோ அல்லது தார் கலவையோ போடாததால், சாலையில் வரும் வாகனங்களுக்கு, பள்ளம் இருப்பது தெரிவதில்லை.
இந்த இரண்டு இடங்களும் இறக்கமான பகுதி என்பதால், சாலையில் வேகமாக வரும் இருசக்கர வாகனங்கள், பள்ளத்தில் இறங்கும் போது தடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. நான்கு சக்கர வாகனங்கள் வேகமாக வந்து, பள்ளம் இருப்பது தெரிந்ததும், பிரேக் போடும் பொழுது, நிலை தடுமாறி எதிரே வரும் வாகனத்தின் மீது மோதுகின்றன.
கடந்த மாதம் இந்த இரண்டு இடங்களில், 10க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், புதிதாக கட்டிய பாலத்தில் உள்ள பள்ளத்திற்கு, தார் கலவை போட்டு சீரமைக்க வேண்டும். மேலும் நான்கு வழி சாலை விரிவாக்கம் பணிகளை, உடனே துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
-
ஓமன் துணை விமானியை விமானத்தில் அனுமதித்து இருக்கக்கூடாது: அமெரிக்க துணை அதிபர்
-
தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக கோரி பேரணி; டில்லியில் ராகுல், பிரியங்கா கைது
-
ரஷ்யாவில் பிளேக் நோய் தொற்று பரவும் அச்சம்; கிருமி பரவுவது எப்படி?
-
விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல் சேவையை துவங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்; சிறப்புகள் ஏராளம்!