பண்ருட்டி பஸ் நிலைய மேம்பாடு பணி புறக்காவல் நிலையம் அகற்றாததால் நிறுத்தம்

பண்ருட்டி: பண்ருட்டி பஸ் நிலையத்தில் கான்கீரீட் தளம் அமைக்கும் பணிக்கு புறக்காவல் நிலையம் இடையூறாக உள்ளதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட நடைகள் பஸ்கள் வந்து செல்கின்றன. ஒவ்வொரு பஸ்சிற்கும் நகராட்சி சார்பில் ரூ.12 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பஸ்நிலையத்தில் போதுமான வசதிகள் இல்லை. இந்நிலையில் கடந்த 2025 ம் ஆண்டு பஸ் நிலைய மேம்பாடு பணிகள் ரூ.4.7 கோடி மதிப்பில் துவங்கினர். இதில் கடலூார், விழுப்புரம் பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் இருந்த 4 க்கு 6 சைஸில் இருந்த 66 கடைகள் அகற்றப்பட்டு கட்டுமானப் பணி துவங்கி 19 மாதம் ஆகியுள்ளது. தற்போது 8 க்கு 8 அடி அகலத்தில் 30 கடைகளாக குறைத்து கட்டப்பட்டு பணிகள் முடிந்துள்ளன.

பஸ் நிலையத்தில் நெய்வேலி, விருத்தாசலம், பாலுார், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி பஸ்கள் நிற்கும் பகுதியில் கான்கரீட் தரைத்ளம் போடும் பணி கடந்த வாரம் துவங்கியது. இதில், நடுவில் புறக்காவல் நிலையம் நடுவில் உள்ளதை அகற்றிட டி.எஸ்.பி.,யிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். நகராட்சி சார்பில் மாற்று இடம் வழங்குவதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் போலீஸ் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஒப்பந்ததாரர் பணியை நிறுத்தியுள்ளார். இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வரும் தீபாவளி பண்டிகைக்குள் பஸ் நிலைய பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement