ஆட்சித் தலைமைப் பொறுப்பில் மோடியின் 25 ஆண்டுகள்: 'கர்மயோகி'யின் சேவைப் பயணம்!
புதுடில்லி: தொடர்ந்து 25 ஆண்டுகள் ஒரு அரசின் தலைவராக (முதல்வர் முதல் பிரதமர் வரை) மக்கள் பணியாற்றி, வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை, பிரதமர் நரேந்திர மோடி எட்டியுள்ளார்.
அவரது சேவை மற்றும் தலைமைப் பண்புகள் குறித்து பாராட்டி, ஸ்ரீ ராமச்சந்திர மிஷன் தலைவர் கமலேஷ் படேல் கூறியதாவது: பிரதமர் மோடி வெறும் அரசியல் தலைவர் மட்டுமல்ல. ஆன்மிகப் பக்குவமும், தீர்க்கமான தலைமைத்துவமும் ஒருங்கே அமையப் பெற்றவர். 17 வயதிலேயே வீட்டைத் துறந்து இமயமலை பயணம் மேற்கொண்டவர். சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சேவையையே தனது வாழ்நாள் இலக்காக மாற்றிக் கொண்டவர். தொண்டர், அமைப்பாளர், குஜராத் முதல்வர், தற்போது நாட்டின் பிரதமர் எனப் பொறுப்புகள் மாறினாலும், அவரிடம் உள்ள சேவை மனப்பான்மை துளியும் மாறவில்லை.
தன்னலமற்ற சேவைக்கு உதாரணங்கள்:
1979ல் மோர்பி அணை உடைந்தபோது, களத்தில் இறங்கி மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். அதன் தாக்கமே, சமீபத்தில் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை அவரால் ஆழமாக உணர வைத்தது.
1990ல் டில்லியில் இருந்து ஆமதாபாத் சென்ற ரயிலில், இருக்கை கிடைக்காமல் தவித்த இரு பெண் ரயில்வே அதிகாரிகளுக்காக, மோடியும், சங்கர்சிங் வகேலாவும் தங்களின் முதல் வகுப்பு படுக்கைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, தரையில் துணியை விரித்துப் படுத்து தூங்கினர். வெளிச்சம் படாத நேரத்திலும் அடுத்தவர் துயர் துடைக்கும் இத்தகைய குணமே ஒரு உண்மையான தலைவரை அடையாளம் காட்டுகிறது.
சவால்களை எதிர்கொண்ட துணிவு:
2001ல் கடுமையான நிலநடுக்கத்தால் குஜராத் நிலைகுலைந்திருந்த நேரத்தில், தேர்தல் அரசியலே அறியாத 51 வயது மோடியிடம் முதல்வர் பதவி ஒப்படைக்கப்பட்டது. எத்தனையோ சந்தேகங்கள், விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அச்சம் என்பது என்னவென்றே அறியாமல் களப்பணியாற்றி வெற்றிகரமான நிர்வாகியாக மாறினார்.
அதேபோல், 2014ல் பிரதமராகப் பொறுப்பேற்றபோதும், உலக அரங்கில் இந்தியாவின் நிலைப்பாடு, தேசப் பாதுகாப்பு என மிகப்பெரிய பொறுப்புகள் அவர் முன் நின்றன. தொடர்ந்து வந்த கோவிட் பெருந்தொற்று, உக்ரைன் போர், மேற்கு ஆசியப் பதற்றங்கள் என உலகமே தத்தளித்த காலகட்டங்களில் கூட, 140 கோடி மக்களின் நம்பிக்கையைச் சுமந்து நாட்டைத் திறம்பட வழிநடத்தினார்.
உண்மையான 'கர்மயோகி':
மனதில் எந்தவித பயமோ, சுயலாபமோ இன்றி, உறுதியான நம்பிக்கையுடன் மக்கள் பணியாற்றுவதே மோடியின் வெற்றி ரகசியம். பொதுவாழ்வில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவரது இந்த 25 ஆண்டு சேவைப் பயணம் ஒரு மிகச்சிறந்த பாடமாகும். தேசத்தை மேலும் பல புதிய சிகரங்களுக்கு எடுத்துச் செல்ல பிரதமர் மோடிக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் இறைவன் அருள வேண்டும். இவ்வாறு அவர் வாழ்த்தியுள்ளார்.
இறைவன் திருவருளால் இந்தியா ஜொலிக்கட்டும். மோடிஜின் தலைமையில் வெற்றி எந்நாளும் கிடைக்கட்டும். எதிர்மறை சக்திகள் ஒழித்து நேர்சக்திகள் பெருகட்டும். தர்மமே வெல்லும். வாழ்க வையகம் வாழ்க இந்தியா.
பிஜேபி, மோடி இந்தியாவின் பெருமையை வெளிகொண்டுவந்தார். காங்கிரஸ் ஆட்சியில் வெள்ளைக்காரன் விட்ட ஆட்சியை தொடர்ந்தார்கள். உதாணுத்துக்க சோனியா என்றால் வெளிநாட்டு பெண்மணியை காங்கிரஸ் தலைமைக்கு போட்டு , மாபெரும் காங்கிரசை இந்தியர்களுக்கு தொடர்பு இல்லாமல் செய்து விட்டார்கள். எந்த கட்சியின் தலைவரும் கடைநிலை தொண்டர்களுடன் தொடர்பு இருக்கணும். நினைத்து பாருங்கள் கவுன் போட்ட வெளிநாட்டு பெண்மணி , வறுமையில் வாட்டும் இந்தியார்களுடன் தொடர்பு இருக்குமா ..?. ஒரு மாபெரும் கட்சி எப்படி அழிந்ததுக்கு எனபதுக்கு காங்கிரஸ் ஒரு உதாரணம். மோடி ஆட்சியில் இந்திய வளர்ந்தது. ஆனால் பக்கத்து நாடு சீனா போல் வாழவில்லை. இந்திய மேற்கத்திய capitalist முறையை பின் பற்றாமல் சீனா போல் அந்த நாட்டுக்கு உகந்த முறையை பின் பற்றி இருக்கணும். 50 கலீல் இந்திய சீனாவை விட முன்னணியில் இருந்தது. இப்போ இந்திய பாகிஸ்தானை கம்பேர் பண்ணுது.
எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் மென்மேலும் நம் பாரதத்தின் புகழ் உலக நாடுகளில் பரவட்டும்.
ஏற்கெனவே ஆண்டவர்கள் செய்த தவறினால் பெரிய உழைப்பு ஏதும் இன்றி இரண்டே வருடத்தில் ஆட்சியை பிடித்து பின் நான்கே மாதங்களில் மோடியின் இடத்தை பிடிக்க நினைப்பவர்கள் மோடியிடம் இருந்து கடும் உழைப்பை முதலில் கற்றுக் கொள்ளட்டும்.
இவர் செய்யும் நல்லாட்சி பிடிக்காமல், இங்கு இருக்கும் எதிர் காட்சிகள் என்று சொல்லிக்கொண்டு திரியும் எதிரி கட்சிகள் இவரை பற்றியும், பி ஜெ பி அரசையும் குற்றம் சொல்வதிலும், அவரை பதவியில் இருந்து விலக்க பொழுது போய் பொழுது விடிஞ்சா போராட்டம் என்ற பெயரில் அராஜகம் செய்து கொண்டிருக்கிறார்கள் தேச துரோகிகள்.
Another MAHATHMA. Let us bow before him.
Some Indians are masters in Extremes. Stinking mindset. No politician is doing extra. They have volunteered to do service to the people, who have elected them.
gunasekaran..feeding your parents is your duty..do that first
இங்கே உள்ள பன்னாடைகளுக்கு இதெல்லாம் தெரியாது. அரசு சொத்தை அடுத்தவன் சொத்தை கொள்ளையடிக்க மட்டுமே தெரியும். இவர்களிடம் காசுக்கு கூவும் சில கழிசடைகள்
இவரிருக்கும் வரை எம் பாரத திருநாட்டிற்கு கவலையேது. இவருக்கு பிறகு வருபவரும் இவரைப் போலவே ஆளுமையோடும் வர வேண்டுமே.
How lucky we are to have him as our Prime Minister. God Bless our dear Narendra Modi Sir with best health and life