உடல்நலம் தேறி வருகிறார் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார்; இந்திய தூதரகம் தகவல்

துபாய்: அபுதாபியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் உடல்நலம் தேறி வருகிறார் என யுஏஇயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

துபாயில் இருந்து டெல் அவிவ் நகருக்கு சென்ற பிளை துபாய் விமானத்தை கடத்தும் முயற்சி நடந்தது. இதனை துணிச்சலுடன் இந்திய விமானி ஸ்மிட் மச்சார் முறியடித்தார். விமானத்தில் சக துணை விமானியால் ஸ்மிட் மச்சார் கடுமையாக தாக்கப்பட்டார். சவுதி அரேபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்மிட் மச்சாருக்கு சேதம் அடைந்த மண்டை ஓட்டு பகுதிகளை டாக்டர் சீரமைத்தனர்.

தற்போது மேல் சிகிச்சைக்காக அபுதாபி மருத்துவமனையில் ஸ்மிட் மச்சார் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கேப்டன் ஸ்மிட் மச்சார் தொடர்ந்து சீரான முன்னேற்றம் கண்டு வருகிறார். அவர் உடல்நிலை தேறி வருகிறார்.

தூதரகம் அவரது குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்'' என தெரிவித்துள்ளது.

Advertisement