ஜவுளிக்கடையில் துணிகர திருட்டு கடலுார் விரைந்த போலீசார்
சேலம்: சேலம் ஜவுளிக்கடையில், ரூ.4.25 லட்சம் திருடி-யவரை பிடிக்க போலீசார் கடலுார் விரைந்துள்-ளனர்.
சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகே, பிர-பல (கோல்டன் ஹவுஸ்) ஜவுளிக்கடை உள்ளது. கடந்த, 3ல், வழக்கமாக கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று முன்தினம் காலை வந்த-போது, கடையில் இருந்த கல்லாபெட்டியை உடைத்து, 4 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் திருடப்-பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து ஜவளிக்-கடை மேலாளர் சிவானந்த முருகன் அளித்த புகாரின்படி, டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசா-ரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:
கடையை பூட்டி விட்டு செல்லும் போது, முன்-னெச்சரிக்கை நடவடிக்கைகாக மின் சப்ளையை துண்டிப்பு செய்து விட்டு செல்வது வாடிக்கை. இதனால் கடையில் உள்ள, 'சிசிடிவி' கேமராவின் செயல்பாடும் தடைபட்டுள்ளது. பணத்தை திருடி சென்றதாக எந்தவொரு பதிவும் 'சிசிடிவி' காட்சியில் பதிவாகாமல் போனதால், குற்றவா-ளிகளை அடையாளம் காண முடியவில்லை.
கடையை பூட்டுவதற்கு முன், உள்ளே சென்று பதுங்கியிருக்கலாம். பின்னர் பணத்தை திருடி சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. லிப்ட் அறையின் கதவை உடைத்து, கீழே வந்து கல்-லாபெட்டியின் பூட்டை உடைத்து, பணத்தை திரு-டிவிட்டு, பைப் லைனை பிடித்து கீழே இறங்கி இருக்கலாம்.
மேலும் கடையின் லிப்ட் கடந்த சில தினங்களாக பழுதாகி இருந்ததால், சரி செய்ய கடலுார் பகு-தியை சேர்ந்தவர் இங்கு வந்து சரி செய்துள்ளார். அவர் நோட்டமிட்டு, பணத்தை திருடி சென்றிருக்-கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் கடலுார், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனர். கடைக்கு வெளியே உள்ள, 'சிசிடிவி' காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு கூறினர்.
மேலும்
-
'மக்களின் நம்பிக்கை, அன்புக்கு சான்று': பிரதமர் மோடிக்கு கமல் பாராட்டு
-
தேசியம் பகுதி:அனைத்திலும் தோல்வி!
-
கடன் சுமை இருந்தாலும் சிறப்பான ஆட்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
-
ரோலர் ஸகேட்டிங் போட்டி வீனஸ் பள்ளி மாணவர் முதலிடம்
-
17 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
-
இலக்கை தாண்டி விண்ணப்பம் வந்தாலும் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மானியம்: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்