சேலம், ஏற்காடு, மேட்டூரில் மழை

சேலம்; சேலத்தில் நேற்றிரவு பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், குளுகுளு சூழல் நிலவியது.

சேலத்தில் நேற்றிரவு, 8:00 மணியளவில் துார-லாக தொடங்கிய மழை, அரை மணி நேரத்-துக்கும் மேலாக கனமழையாக உருவெடுத்தது. அழகாபுரம் சாரதா கல்லுாரி சாலையில், மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதிக்குள்ளாகினர். நான்கு ரோடு, ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி பகுதிகளில் குளுகுளு சூழல் நில-வியது.* ஏற்காட்டில் நேற்று இரவு, 9:15 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்காடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இருளில் மூழ்கியது. பலத்த மழையால், வாக-னங்களை இயக்க முடியாமல் ஓட்டுனர்கள் மிகவும் சிரமப்பட்டு, மெதுவாக ஊர்ந்தவாறு ஓட்டி சென்றனர்.
* மேட்டூர் சுற்றுப்பகுதியில், 12 நாளுக்கு பின்பு நேற்று மின்னல், இடியுடன் அரை மணி நேரம் மழை பெய்தது. மேட்டூர் சுற்றுப்பகுதியில் கடந்த மாதம், 21ல், 6.8 மி.மீ., மழை பெய்தது.
அதன் பின்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்-தது. அதனை தொடர்ந்து, 12 நாட்களுக்கு பின்பு நேற்று இரவு, 8:30 மணியளவில் மேட்டூர் சுற்றுப்-பகுதியில் மின்னல், இடியுடன் மழை பெய்தது. அரை மணி நேரம் நீடித்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
* தாரமங்கலம் சுற்று வட்டாரத்தில், வெயிலின் தாக்கம் சில நாட்களாக அதிகளவில் இருந்தது. அதனால் குழந்தைகள், முதியோர் இரவில் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு, 7:20 மணிக்கு திடீரென மழை பொழிய துவங்கியது. தொடர்ந்து, 45 நிமிடம் கன மழை பெய்தது. அதனால் குளிர்ந்த காற்று வீசி-யதால் மக்கள் மகிழ்ச்சி
அடைந்தனர்.

Advertisement