காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம்
தாரமங்கலம்; தாரமங்கலம் அருகே, பாப்பம்பாடி அண்ணா நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்-ளன. அந்த பகுதியில் உள்ள, மேல்நிலை நீர்-தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினி-யோகம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக, நகரின் மத்தியில் வசிக்கும், 30க்கும் குடும்பங்க-ளுக்கு மட்டும் குடிநீர் சரியாக கிடைக்கவில்லை. அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவ-டிக்கை எடுக்காததால், நேற்று மதியம் 12:00 மணிக்கு, 50க்கும் மேற்பட்டோர் சங்ககிரி சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடு-பட்டனர். இதனால் போக்கு
வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில்,'குடிநீர் வினி-யோகிக்கும் போது, எங்கள் பகுதிக்கு அருகே உள்-ளவர்கள் மின் மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால், எங்களுக்கு கிடைப்ப-தில்லை. அதனால், தண்ணீரை விலைக்கு வாங்-கியும், அருகே சென்று பிடித்து பயன்படுத்தி வரு-கிறோம்,'என்றனர்.மறியலில் ஈடுபட்டவர்களிடம், தாரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அதிகாரி-களை தங்கள் பகுதிக்கு அழைத்து சென்று குறை-களை தெரிவித்தனர். பின்னர், தாரமங்கலம் பி.டி.ஓ., பிரபு, ஆப்பரேட்டரை மாற்றுவதாகவும், இரும்பு பைப் லைன் அமைக்க, அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மேலும்
-
'மக்களின் நம்பிக்கை, அன்புக்கு சான்று': பிரதமர் மோடிக்கு கமல் பாராட்டு
-
தேசியம் பகுதி:அனைத்திலும் தோல்வி!
-
கடன் சுமை இருந்தாலும் சிறப்பான ஆட்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
-
ரோலர் ஸகேட்டிங் போட்டி வீனஸ் பள்ளி மாணவர் முதலிடம்
-
17 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
-
இலக்கை தாண்டி விண்ணப்பம் வந்தாலும் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மானியம்: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்