சேலத்தில் மூதாட்டி கொலை 6 பவுன் நகை திருட்டு
சேலம்; வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து கொலை செய்து, 6 பவுன் நகை திருடப்-பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், கிச்சிபாளையம் கடம்பூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜனாபாய், 74, இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் தனித்தனியே வசித்து வரும் நிலையில், கடைசி மகன் செந்தில்குமார் மட்டும் இவருடன் வசித்து வருகிறார். நேற்றிரவு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய செந்-தில்குமார், ஜனாபாய் கழுத்து நெரிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்-சியடைந்தார். இதுகுறித்து கிச்சிபாளையம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் நடத்திய விசாரணையில், ஜனாபாய் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல், தோடு உள்ளிட்ட, 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்-டது தெரியவந்தது. வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் பேச்சு கொடுத்து, வீட்டுக்குள் நுழைந்து, மூதாட்டியை கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் போலீசார் சோதனை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்-றனர்.
மேலும்
-
மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
-
ஓமன் துணை விமானியை விமானத்தில் அனுமதித்து இருக்கக்கூடாது: அமெரிக்க துணை அதிபர்
-
தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலக கோரி பேரணி; டில்லியில் ராகுல், பிரியங்கா கைது
-
ரஷ்யாவில் பிளேக் நோய் தொற்று பரவும் அச்சம்; கிருமி பரவுவது எப்படி?
-
விசாகப்பட்டினத்தில் கடற்படை கப்பல் சேவையை துவங்கி வைத்தார் ராஜ்நாத் சிங்; சிறப்புகள் ஏராளம்!