அக்டோபர் 11ல் மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் இணைந்து பயணம்

25

-நமது நிருபர்-
சென்னையில் மெட்ரோ ரயிலில் 2ம் கட்டத்தை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்கும் பிரதமர் மோடி, பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை முதல்வர் விஜயுடன் பயணம் செய்ய இருக்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

சென்னையில் இரண்டாம் கட்டமாக, 118 கி.மீ., தொலைவுக்கு, மூன்று வழித்தடங்களில், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், கலங்கரை விளக்கம் முதல்- பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில், 26 கி.மீ., துாரத்தில், பூந்தமல்லி - போரூர் வரையிலான, 10 கி.மீ., தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளன.

பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழை ரயில்வே வாரியம் வழங்கி உள்ளது. இதேபோல, போரூர் - வடபழனி இடையேயும் அனைத்து பணிகளும் முடிந்து, கடந்த ஜனவரி 11ல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் தாமதமானது.

இந்நிலையில் வரும் அக்டோபர் 11ம் தேதி பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். பிறகு பிரதமர் மோடி, பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை முதல்வர் விஜயுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய இருக்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியுடன் பங்கேற்கும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும். போரூரில் இருந்து சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்திற்கு சாலை வழியாக பிரதமர் மோடி செல்கிறார். அங்கு மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பிறகு மாலையில் வேலூருக்கு ஹெலிாப்டர் மூலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு, விமான நிலையம் உள்ளிட்ட பல உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து மேம்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், துவங்கி வைக்கவும் இருக்கிறார். பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

@block_G@

கோவிலில் வழிபாடு!



பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை அக் 11ல் துவங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி, போரூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் சென்று பூஜை செய்து வழிப்பாடு நடத்த உள்ளார்.block_G

Advertisement