இந்திய உணவு பாதுகாப்பு துறையில் ஒரு ராக் ஸ்டார்: துக்காராம் முண்டேவுக்கு நியூயார்க் டைம்ஸ் புகழாரம்
- நமது சிறப்பு நிருபர்-
இந்திய உணவு பாதுகாப்புத் துறையில் ஒரு ராக் ஸ்டார் என்று மகாராஷ்டிரா உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டேவுக்கு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் புகழாரம் சூட்டி, முதல் பக்க கட்டுரை வெளியிட்டுள்ளது.
மஹாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றி வருபவர் துக்காராம் முண்டே. இவர் பதவியேற்ற முதல் நாளில் இருந்தே அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். உணவகங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்களில் ரெய்டு நடத்தியுள்ளார். விதிமீறிய உணவகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. ஏராளமான கெட்டுப்போன உணவுகள், காலாவதியான உணவுப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்படுகின்றன.
இதன் பயனாக, உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் அமலாகத் துவங்கியுள்ளன. செயற்கை நிறமூட்டிகளை வியாபாரிகளே தவிர்க்க துவங்கியதால் மக்களுக்கு இதன் பலன் கிடைத்து வருகிறது. தினமும் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் துக்காராம் முண்டே நடத்திய அதிரடி ரெய்டுகளை பாராட்டி செய்திகள் வெளியாகி வருகின்றன. நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகமான அவரது அதிரடியான நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது.
அந்நத வகையில், துக்காராம் முண்டே, பிரபல 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஒரு "ராக் ஸ்டார்" என்று வர்ணிக்கப்பட்டுள்ளார். தனது முதல் பக்கத்தில், “இந்தியாவில், ஒரு உணவு ஆய்வாளர் ஒரு ராக் ஸ்டார்” என்ற தலைப்பின் கீழ் துக்காராம் முண்டே குறித்த செய்தியை இடம்பெறச் செய்து, “உணவருந்துபவர்கள் அவரைப் போற்றுகிறார்கள், உரிமையாளர்கள் அவருக்கு அஞ்சுகிறார்கள்” என்ற வாசகத்துடன் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
தனது டிஜிட்டல் செய்தியில், நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் அவரை “உணவுப் பாதுகாப்புப் பிரபலம்” என்று வர்ணித்ததுடன், அவரது ஆய்வுகள் எவ்வாறு அவரை ஒரு பொது நபராக மாற்றி, உணவு சுகாதாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன என்பதையும் வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து பதில் அளித்து சமூக வலைதளத்தில் துக்காராம் முண்டே வெ ளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நல்லாட்சி என்பது தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பது அல்ல. அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். உணவுப் பாதுகாப்பு என்பது மக்களைப் பாதுகாப்பதும், உணவின் தரத்தை உயர்த்துவதாகும்; நியாயமாக இயக்கும் நிறுவனங்கள் நம்பகத் தன்மையைப் பெறுகின்றன, உணவு பாதுகாப்பு துறை செயல்படுகிறது என்று மக்கள் நம்பத் துவங்கி உள்ளது. இதனை நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இவ்வாறு துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (8)
spr - chennai,இந்தியா
06 அக்,2026 - 14:16 Report Abuse
இந்தியாவில் பொதுவாகவே நுகர்வோருக்குப் பாதுகாப்பில்லை என்ற கருத்து ஆழமாக வேறுன்றியிருக்கிறது. கலப்படம் அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படுவதில்லை. காலாவதியான மருந்துகளை மறு சுழற்சி செய்வதைக் கண்டுபிடித்தாலும் செய்தவர்களை பிடிப்பதில்லை பிடித்தாலும் தண்டிப்பதில்லை. மக்களுக்கும் விழிப்புணர்வு இல்லை திரு துக்காராம் முண்டேவைப் பாராட்டுவது போல செய்தித் தாள்கள் அவரை உணவு உற்பத்தியாளர்களின் வெறுப்புக்கு ஆளாக்குகிறதோ? இது இந்தியாவின் பண்டிகைக்கு காலம் தங்களது லாபம் குறையுமென்றால் அவரை அழிக்க முயற்சி எடுப்பார்கள். அரசும் கண்டு கொள்ளாது. கூடிய விரைவில் இவரும் காணாமற் போகலாம் 0
0
Reply
Columbus - ,
06 அக்,2026 - 11:42 Report Abuse
I hope that the Ford Foundation does not give him Magsaysay Award and have him start a political movement and oppose Modi. This was the same template followed with Kejriwal and Wangchuk. 0
0
Reply
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
06 அக்,2026 - 11:33 Report Abuse
தேசத்துக்கு நிறைய துக்காராம்கள் தேவை. ஆனால் கிடைப்பதில்லை. காரணம், நேர்மை அரிதாகி விட்டது. நமது வேண்டுகோள், உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் இவரை ஒரு முன் மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும் என்பது தான். எந்த துறையாக இருந்தாலும் சரி. 0
0
GUNASEKARAN RANGASAMY - ,இந்தியா
06 அக்,2026 - 12:46Report Abuse
லஞ்சம் கொடுப்பவர்கள் தான் அதிகம். கொடுப்பதைக் கொடுத்து வேண்டியதை எடுத்துக்கொண்டு பின் எல்லாவற்றையும் கெடுத்து விட்டு ஒப்பாரி ஆலோசனை வேறு- மற்றவர்களுக்கு. வருமான சான்றிதழுக்கு நேற்று கூட ₹5000 "கொடுத்து" வாங்கியதாக செய்தி. கொடுப்பவர் அதிகம் பெறுபவர் குறைவு. 0
0
Reply
R SRINIVASAN - CHENNAI,இந்தியா
06 அக்,2026 - 10:26 Report Abuse
நான் வேளச்சேரியில் வசிக்கிறேன். இங்கு உள்ள பிரதான சாலைகளில் மாலை வேளைகளில் செயல் படும் சாலையோர உணவகங்கள் மிகப்பெரும் உடல் நல சீர்கேடு. இவர்கள் சாலையின் ஒரு லேனை அடைத்து கொள்கிறார்கள் 0
0
Reply
GMM - KA,இந்தியா
06 அக்,2026 - 10:12 Report Abuse
துக்காராம், தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை முழுமையாக செயல் படுத்தி காட்டியவர். நீதிமன்றம் அதிகார துஷ்பிரயோகம் என்று தடை விதிக்க முடியவில்லை.? வழக்கு இல்லை. ஆளும்கட்சி குறுக்கீடு இல்லை. 0
0
Reply
Sun - ,
06 அக்,2026 - 10:11 Report Abuse
யாரும் தன் கடமையை மட்டும் ஒழுங்காக செய்தால் பெயரும் புகழும் தானே தேடி வரும் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.நம் தமிழ் நாட்டில் உணவுப் பாதுகாப்பு ஆணையர் என்ற ஒரு பதவி உள்ளதா? அந்த அதிகாரியின் பெயர் என்ன? பெரும்பாலானோருக்கு தெரியவே தெரியாது. 0
0
GUNASEKARAN RANGASAMY - ,இந்தியா
06 அக்,2026 - 12:57Report Abuse
தமிழ் நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களின் அதிகாரிகள் / அம் மகாத்மாக்களின் பட்டியலை வெளியிட்டதற்கு நன்றி. அங்கு ஆளுங் கட்சிக்காரனின் மேல் கை வைத்தால் தான் தெரியும்.. 0
0
Reply
மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Advertisement
Advertisement