மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்

கரூர்:நொய்யல் அருகே உள்ள குந்தாணிபாளை யம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் மஞ்சள் திருமஞ்சனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், நொய்யல் முனியப்ப சாமி கோவில், அத்திப்பாளையம் பொன்னாச்சி அம்மன் கோவில், குளத்துப்பாளையம் தங்காயி அம்மன் கோவில், சேமங்கி மாரியம்மன் கோவில், தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன் கோவில உள்பட பல்வேறு கோவில்களில் அபிஷேக ஆராதனை நடந்தது.
* க. பரமத்தி ஒன்றியம் குப்பம் அருகே உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு, 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

Advertisement