கூட்டுறவு நிறுவனங்களில் நகை கடன்

விழுப்புரம்: கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகை கடன் ஒரு கிராமிற்கு, 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி செய்திக்குறிப்பு:

நகைக்கடன்களுக்கு ஒரு கிராமிற்கு அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை அல்லது நகைகளின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் என மாற்றியமைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட கடன் அளவானது, இனி புதிதாக வழங்கப்படும் நகைக் கடன்களுக்கும் மற்றும் ஏற்கனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் முழுமையாக பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement