இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் ஹர்மன்பிரீத் கவுர்

புதுடில்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர், பதவி விலகினார்.அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

2009 ல் அறிமுகமான அவர், 2016 முதல் டி20 அணி கேப்டன் ஆனார். மித்தாலி ராஜ் ஓய்வுக்கு பின் ஒரு நாள், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்தியாவில் நடந்த ஒரு நாள் மகளிர் உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார். ஆசிய விளையாட்டிலும் அவரது தலைமையில் இந்திய அணி தங்கம் வென்றது. 211 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தினார்.

இந்திய அணிக்காக 8 டெஸ்ட், 164 ஒரு நாள் மற்றும் 205 டி 20 போட்டிகளில் விளையாடி 9,191 ரன் எடுத்தார்.

Advertisement