கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் தற்கொலை
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் பூச்சி மருந்து குடிந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆறகளூரைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் மருதமுத்து, 49; இவர் மீது தலைவாசல் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதியப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
கீழ்குப்பம் அடுத்த கூகையூரில் உள்ள அக்கா சகுந்தலா வீட்டிற்கு மருதமுத்து அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். தன் மீது கொலை வழக்கு இருப்பதால் மன வேதனையில் இருந்த மருதமுத்து, கடந்த 4ம் தேதி கூகையூர் வசிஷ்ட நதிக்கரையில் மதுவுடன் களைக்கொள்ளி மருந்தை கலந்து குடித்துள்ளார்.
தகவலறிந்த அவரது குடும்பத்தினர் மருதமுத்துவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
'மக்களின் நம்பிக்கை, அன்புக்கு சான்று': பிரதமர் மோடிக்கு கமல் பாராட்டு
-
தேசியம் பகுதி:அனைத்திலும் தோல்வி!
-
கடன் சுமை இருந்தாலும் சிறப்பான ஆட்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
-
ரோலர் ஸகேட்டிங் போட்டி வீனஸ் பள்ளி மாணவர் முதலிடம்
-
17 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
-
இலக்கை தாண்டி விண்ணப்பம் வந்தாலும் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மானியம்: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்