நாடகத்தை நிறுத்துங்கள் ராகுல்; கிரண் ரிஜிஜூ காட்டம்
புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக்கோரி டில்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: ராகுல், காங்கிரஸ் கட்சியினர் தினமும் நாடகம் போடுகின்றனர். தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டை விமர்சிக்கின்றனர். இதனை நிறுத்த வேண்டும். 2014 முதல் இந்த நாடகத்தை அரங்கேற்றுகின்றனர். இன்னும் எத்தனை நாள் நாடகம் போடுவீர்கள்.
ஜனநாயகத்தில், மக்களுக்கு சேவை செய்தால், மக்களின் உத்தரவை ஏற்க வேண்டும். மக்களின் உத்தரவை பெற தவறும்போது, தேர்தல் கமிஷனை நீங்கள் விமர்சிக்கின்றீர்கள். சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கேட்கிறீர்கள். சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்து, நீதித்துறை மீது நம்பிக்கையில்லை என்பதை காட்டுகிறீர்கள். தேர்தல் கமிஷனையும், அரசையும் ஊழல் நிறைந்தது என சொல்கின்றீர்கள். இதனால் ஜனநாயகத்திற்கு எந்த பலனும் இல்லை. காங்கிரஸ் புத்துயிர் பெறாது.
தங்களுக்காக அல்லாமல், நாட்டுக்காகவும், சமூகத்திற்காகவும் அயராது பாடுபடும் பிரதமர் மோடி மற்றும் பாஜ தொண்டர்களிடம் ராகுல் பாடம் கற்க வேண்டும். நாட்டிற்காக பாடுபட வேண்டும். நாடகத்தை நிறுத்த வேண்டும். மக்களுக்கு சேவை செய்தால், அவர்கள் உங்களை நம்புவார்கள். நாடகம் போடுவதால் ஒன்றும் நடக்காது. இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.
பப்பு.... தான் மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர் என்பதை வாகாக மறந்து விட்டு.... தேர்தல் ஆணையம் தான் தங்களது கட்சி தோல்விக்கு காரணம் என்று புலம்பி கொண்டு இருக்கிறார்... மக்களின் நம்பிக்கையை பெற வேண்டுமானால்.... முதலில் தீவிரவாதிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்..... அப்போது தான் மக்களுக்கு இவர்கள் கட்சி மீது நம்பிக்கை வரும்.... இல்லையென்றால்.... இந்தியாவில் உங்களுக்கு வாய்பில்லை ராசா..
.. வாய்ப்பே இல்லை.
பப்பு கான் பா ஜ க வின் நட்சத்திர தேர்தல் பிரச்சார பீரங்கி
இந்த நாட்டில் அனைத்து அதிகார அமைப்புக்களும் ஆளும் அரசியல் வாதிகளுக்கு சாதகமாகவும் வறியவர்களின் அரசமைப்பின் படியான அடிப்படை உரிமைகள் மற்றும் சட்டப்பூர்வமான உரிமைகளை பறித்து அவர்களை நடை பிணங்களாக ஆக்குவதிலேயே குறியாக உள்ளன.இதில் உச்ச நீதிமன்றமே விதிவிலக்கு இல்லை எனும் நிலையில் நீதிபதிகளின் மீது உண்மையான குற்றச்சாட்டுகள் சுமத்தி விமரிசிப்பது குற்றமாகாது என நீதிமன்ற அவமதிப்பு சட்டத்திலேயே உள்ளது. மேலும் பல தீர்ப்புகளில் நியாயமான விமரிசனங்களை வரவேற்று சுய பரிசோதனையும் சீர்படுத்துதலும் செய்துகொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கோடிக்கானவர்களின் வாக்குரிமையை பறித்ததன் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் அந்த குற்றத்திற்கு ஆதரவாகவே இருப்பர்.வாக்குரிமையை பறித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்பது வறியவர்களுக்கு ஏற்றது அல்ல. குற்றச்சாட்டுகள் சுமத்துவது போராட்டம் நடத்துவது தீவிரமான பிறகு இனி ஏமாறினால் பதவியில் நீடிப்பது கடினம் என தானே நீக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து தகுதியானவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் ஏற்பாடு செய்துள்ளதை ஆரம்பத்திலேயே செய்திருந்தால் தேர்தல் ஆணையத்தின் மீது அவப்பெயர் இல்லாமல் இருந்திருக்கும்.நம்மை காப்பாற்ற பிரதமர் இருக்கிறார் என்ற ஆணவத்தில் அதை செய்யாமல் செய்யத்தகாத செயல்களை எல்லாம் செய்து தலைமை தேர்தல் ஆணையர் சட்டத்தின் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார்.உச்ச நீதி மன்றம் முன்பு தப்பிவிட்டதை போல தப்பவிட்டால் மக்களாட்சி என்பது பெயரளவிற்கானதாக மாறிவிட்டது நீடிக்கும்.
Rightly said so, he is restless because people did not find him as Prime Ministerial candidate, he is the agent of all foreign deep State teams to destroy the Indian Government and also Indian Economy, growth of the country and on.... I humbly request people of India should neglect him and should not elect him for our Parliament which is Temple of Our country Bharatமேலும்
-
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் திமுகவுக்கு டிபாசிட் காலி
-
இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை
-
நொய்டா விமான நிலைய பெயர் மாற்றம்; நரேந்திர மோடி பெயரை சூட்ட உபி அரசு முடிவு
-
இடைத்தேர்தல் முடிவுகள்; தவெக அரசுக்கு மக்கள் தந்த அங்கீகாரம்
-
இபிஎஸ் எதிர்காலம்; இடைத்தேர்தல் முடிவுகளால் கேள்விக்குறி!
-
மனைவி அளித்த வன்கொடுமை புகார்; டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது