பிரிட்டனில் ஓடும் ஆட்டோ: ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட வீடியோ வைரல்

7

புதுடில்லி: லண்டன் சாலையில் ஆட்டோ இயக்கப்படுவது பற்றி மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் வெளியிட்ட வீடியோ, இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பயணிக்கும் வாகனம் ஆட்டோ. நமது நாட்டு சாலைகளில் ஆட்டோக்கள் அதிகம் காணப்படுவது இயல்பு.

முன்னேறிய நாடான பிரிட்டன் சாலையில் சென்ற ஆட்டோ ஒன்றின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அந்த ஆட்டோ ஓடும் வீடியோ வீடியோவை வெளியிட்டு'' ஆட்டோரிக்ஷா பிரிட்டனுக்கு வந்துவிட்டது. அதுவும் மஹிந்திரா நிறுவனத்துடையது. எங்களுடையது,'' என எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பல தரப்பட்ட கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவில் ஆட்டோ ஓட்டுநர்களின் பழக்கத்தை சுட்டிக்காட்டிய இன்னொருவர், 'தயவு செய்து பிரிட்டனில் உள்ள ஆட்டோ ஓட்டுநரிடம் இன்டிகேட்டர் போட்டு திரும்ப வேண்டும். எந்த பக்கம் இன்டிகேட்டர் போடுகிறாரோ அந்த பக்கம் திரும்ப சொல்லுங்கள்,'' என பதிவிட்டுள்ளார்.

'இந்தியாவை 200 ஆண்டு ஆட்சி செய்த பிரிட்டீஷ்காரர்கள், இப்போது தலைகீழ் காலனித்துவத்தை அனுபவிக்கப் போகிறார்கள். இனி லண்டனில் மழை பெய்தால், 'அந்தப்பக்கம் போக முடியாது, டிராபிக் அதிகம்' என்று ஆட்டோ டிரைவர் சொல்லுவார் என்கிறார், ஒருவர்.

'பெருமைக்குரிய தருணம்' என்றும், 'அடுத்தது பயணிகளுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் கட்டண பிரச்னை வரும் பாருங்கள்' என்றும் கமென்ட்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

Advertisement