பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்

23

- நமது நிருபர்-


பிரபல பாலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்; அவருக்கு வயது 75.

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர் கோவாவின் டோனா பவுலாவில் உள்ள அவரது வீட்டில் இன்று மயக்கம் அடைந்ததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் 45 நிமிடம் தொடர்ச்சியாக சிபிஆர் அளித்தும், மீண்டும் சுயநினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை; பிறகு சிகிச்சை பலன் அளிக்காமல் நானா படேகர் உயிரிழந்தார்.

பயோ டேட்டா!


* மஹாராஷ்டிராவில் கடந்த 1951ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிறந்தவர் நானா படேகர்.

* இந்தியத் திரைப்பட உலகின் மிகவும் பிரபலமான, பன்முகத்திறமை கொண்ட பாலிவுட் மற்றும் மராத்தி நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.

* இவருக்கு மனைவி நீலகாந்தி படேகர் உள்ளார். இவர்கள் இருவரும் பிரித்து வாழ்ந்து வந்தனர். மல்ஹர் படேகர் என்ற மகன் உள்ளார்.

* இவர் பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் படத்தில் நடித்துள்ளார் ரஜினியின் காலா படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

* இவரது பரிந்தா, பிரஹார், அங்கார், கிராந்திவீர், திரங்கா, காமோஷி மற்றும் அப் தக் சப்பான் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

* மஹாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிகளுக்கு உதவுவதற்காக 'நாம் பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கி பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்தவர்.

* இவர் 3 தேசிய விருதுகளை வென்றவர்; இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு பத்மஶ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

* இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

@block_P@

ஓம் சாந்தி!



இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: நானா படேகரின் தனித்துவமான நடிப்பு, வெளிப்படையான பேச்சுகள் மற்றும் ஹிந்தி, மராத்தி திரையுலகப் பங்களிப்பு மறக்க முடியாதது. அவரது மறைவு கலை உலகிற்கு பேரிழப்பாகும். நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஈடு இணையற்ற பன்முகத் தன்மையையும் படைப்பாற்றலையும் கொண்டு சேர்த்தார். தலைமுறைகள் கடந்தும் நினைவுகூரப்படக்கூடிய பல கதாபாத்திரங்களை அவர் நமக்கு அளித்துள்ளார். அவரது குடும்பத்தினர், மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.block_P

@block_G@

அரசு மரியாதையுடன்…



நடிகர் நானா படேகருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று மஹாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது. திரைப்படத் துறைகளில் நானா படேகர் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளது.block_G

Advertisement