விமானப்படை வீரர்களால் பெருமை கொள்ளும் இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்
புதுடில்லி: விமானப்படை வீரர்களால் இந்தியா பெருமை கொள்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வீரர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக அக்டோபர் 8ல் ஆண்டுதோறும் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. விமான படையினர் இயற்கை பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளிலும் ஈடுபடுகிறது. இன்று விமானப்படை தினத்தில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
விமானப்படை வீரர்களைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது; விமானப்படை தினத்தில், நமது வான்பரப்பைப் பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் நாம் போற்றுகிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: விமானப்படை தினத்தை முன்னிட்டு, அனைத்து விமானப்படை வீரர்களுக்கும், முன்னாள் வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்திய விமானப்படை நாட்டிற்கு முன்மாதிரியான சேவையை ஆற்றியுள்ளது.
நாட்டை பாதுகாப்பதில் நமது விமானப்படை வீரர்களின் துணிச்சல் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது நிரூபணம் ஆனது. அவர்களது அர்ப்பணிப்பு, நாட்டிற்கு உத்வேகமாகவும் பெருமையாகவும் விளங்குகிறது. இந்திய விமானப்படை தனது பெருமைமிக்க சேவையை தொடர்ந்து செய்யட்டும். இவ்வாறு திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
விமானப்படை வீரர்களுக்கு வாழ்த்துக்கள்மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்