பிஎப்பில் பிரத்யேக ஏற்பாடு; ஆண்டு இறுதிக்குள் வருகிறது யுபிஐ செயலிகள் வாயிலாக பணத்தை எடுக்கும் வசதி

-நமது நிருபர்-

யுபிஐ செயலிகள் வாயிலாக பிஎப் பணத்தை எடுக்கும் வசதியை வரும் டிசம்பர் மாததிற்குள் அறிமுகம் செய்ய சோதனை துவங்கியது; புதிய செயலியையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகம் செய்கிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) உறுப்பினர்கள் வசதிக்காகவும், வேகமாக சேவைகளை வழங்கவும் பல டிஜிட்டல் சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறது. தற்போது, ​​பிஎப் பணத்தை யுஏஎன் (UAN) இணையதளம் வழியாக ஆன்லைனில் எடுக்கலாம்.

அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, பிஎப்யில் இருந்து எடுக்கப்படும் பணம் சந்தாதாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வங்கியில் இருந்து நாம் பணத்தை எடுத்து கொள்ளலாம். தற்போது யுபிஐ செயலிகள் வாயிலாக பிஎப் பணத்தை எடுக்கும் வசதியை வரும் டிசம்பர் மாததிற்குள் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான சோதனை முறைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

புதிய செயலியையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகம் செய்கிறது. சந்தாதாரர்கள், அனுமதியோடு கையிருப்பில் இருந்து 75 சதவீதம் வரை யுபிஐ மூலம் பணத்தை எடுக்க முடியும்," என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய விதிகளின்படி, பிஎப் இருப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் சந்தாதாரரின் கணக்கில் இருக்க வேண்டும். கல்வி, திருமணம் மற்றும் வீட்டு கட்டுவது உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகளுக்கு, ஒரு சந்தாதாரர் கையிருப்பில் இருந்து 75 சதவீதம் வரை எடுக்கலாம்.

கருத்து பதிவிடுங்கள்!

நீங்கள் பிஎப்யில் பணம் வைத்து இருக்கிறீர்களா, யுபிஐ வாயிலாக பணம் எடுக்கும் வசதி உபயோகமாக இருக்குமா என்பது உள்ளிட்ட உங்களது கருத்தை கமென்டில் பதிவிடுங்கள் வாசகர்களே!

Advertisement