அமேசானில் 1,000 பேர் பணிநீக்கம்
புதுடில்லி: அமேசான் நிறுவனம், உலகளவில் 1000 பேரை பணிநீக்கம் செய்து, நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் இந்தியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நீடித்து வரும் ஆட்குறைப்புப் படலம் ஓயாத நிலையில், ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான அமேசான் நிறுவனம் மீண்டும் ஒரு புதிய பணிநீக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. 1,000 ஊழியர்களை குறைக்கும் இந்த நடவடிக்கையில் இந்திய ஊழியர்களும் சிக்கித் தவிக்கின்றனர்.
திடீர் கல்தா:
அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆன்டி ஜாஸியின், செலவுக் குறைப்பு நடவடிக்கை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பைச் மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.
இதில், இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள கஸ்டமர் கேர், மார்க்கெட்டிங் மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இந்த பணிநீக்கக் கடிதம் வந்துள்ளது. அவர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் மனக்குமுறல்களை பதிவிட்டு வருகின்றனர்.
அமேசான் நிர்வாகம் உறுதி:
இந்த ஆட்குறைப்பை உறுதி செய்துள்ள அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: வாடிக்கையாளர்களுக்கு விரைவான சேவையை வழங்கவும், முன்னுரிமைப் பணிகளில் கவனம் செலுத்தவும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு சிறிய அளவிலான ஊழியர்களைப் பணியிலிருந்து விடுவிக்கும் கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா காரணம்:
பணிநீக்க நடவடிக்கை குறித்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கூறியதாவது: கோவிட் காலத்தில் அனைவரும் வீடுகளிலிருந்தபடி பொருட்கள் வாங்கியதால் கடுமையான வேலைப்பளு ஏற்பட்டது. அப்போது தேவைக்கு அதிகமாகவே ஊழியர்களைப் பணியமர்த்திவிட்டோம் . தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு அதுவே காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
விமானப்படை வீரர்களால் பெருமை கொள்ளும் இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்
-
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பால் அதிர்ச்சி
-
பிஎப்பில் பிரத்யேக ஏற்பாடு; ஆண்டு இறுதிக்குள் வருகிறது யுபிஐ செயலிகள் வாயிலாக பணத்தை எடுக்கும் வசதி
-
அமெரிக்காவில் படிக்கப் போகும் இந்திய மாணவர்களுக்கு பேரிடி: வேலைக்கு தனியாக ரூ.68 லட்சம் வசூலிக்க பரிந்துரை
-
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்
-
17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த இண்டிகோ விமானத்தில் மின்னல் தாக்கியது; அவசர தரையிறக்கம்