பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்
ஜெருசலேம்: பிளை துபாய் விமானத்தில் தாக்குதலை முறியடித்ததற்காக இஸ்ரேல் பயணிகள் 6 பேர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்; இந்திய விமானி ஸ்மிட் மச்சாருக்கு குணமடைந்த பிறகு ஜனாதிபதி பதக்கம் வழங்கி இஸ்ரேல் கவுரவிக்க உள்ளது.
பிளைதுபாய் விமானத்தின் விமானி அறைக்குள் தனது துணை விமானியின் தாக்குதலை முறியடித்து, 174 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.
ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹம்மாம் அல்-ஹம்மாமி தாக்கியதில் படுகாயம் அடைந்தாலும் இந்திய விமானி காக்பிட்டின் கதவைத் திறந்தார். அவரது இந்தச் செயலால், இஸ்ரேலியப் பயணிகள் காக்பிட்டிற்குள் புகுந்து, தாக்குதல் நடத்தியவரை அடக்க முடிந்தது
விமானக் கடத்தல் முயற்சியைத் தடுத்ததில் ஆற்றிய பங்கிற்காக, இஸ்ரேல் பயணிகள் தாலி மனேஸ், ஸ்விகா மனேஸ், யனிவ் ஹயூன், டாக்டர் ஷோட்டா முசாயேவ், ஆசப் ரஜுவான் மற்றும் பர்திலோவ் ஆகிய 6 பேருக்கு இஸ்ரேல் இஸ்ரேல் ஜனாதிபதி ஹெர்சாக் குடிமக்கள் வீரதீர விருது வழங்கினார். இந்திய விமானி உடல் நலம் தேறிய பிறகு அவருக்கு விருது வழங்கப்படும் என்று இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் கூறினார்.
விருது வழங்கும் விழாவில் இஸ்ரேல் ஜனாதிபதி பேசியதாவது: தங்களின் துணிச்சல், சமயோசித புத்தியால், இந்த மாவீரர்கள் உலகையே உலுக்கியிருக்கக்கூடிய ஒரு பேரழிவுகரமான விமான விபத்தைத் தடுத்து, 174 விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றினர். இன்று விருது வழங்கி இஸ்ரேல் பயணிகள் 6 பேர் கவுரவிக்கப்பட்டனர்.
இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சார் விரைவாக குணமடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கேப்டன் ஸ்மிட் மச்சாரின் வீரமும், துணிச்சலும் ஒரு பேரழிவைத் தடுக்க உதவியது. அவர் மீண்டும் உடல்நலம் தேறியதும், இஸ்ரேல் மக்களின் சார்பாக, இஸ்ரேல் அரசின் குடிமக்கள் வீரத்திற்கான ஜனாதிபதி விருதை அவருக்கு வழங்குவது எனது பாக்கியமாக இருக்கும்," என்றார்.
மேலும்
-
அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
-
போலி வீடியோக்களுக்கு கடிவாளம்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
-
நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன்: எலான் மஸ்க்கை புகழ்ந்த டிரம்ப்
-
டில்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு: போலீஸ் கடும் எச்சரிக்கை
-
கோவையில் காட்டுக்குள் சட்ட விரோதமாக செயல்பட்ட 13 ரிசார்ட்டுகளுக்கு பூட்டு