பாரிஸில் வெடித்தது மாணவர் போராட்டம்: பள்ளிகள் மூடல்
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கல்வித்துறைக்கான நிதிப் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளின் மோசமான உள்கட்டமைப்பைக் கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல இடங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
375 பள்ளிகள் மூடல்:
பிரான்சில் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாதது, பழுதடைந்த வகுப்பறைகள், உள்கட்டமைப்பு மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடந்த செப்டம்பர் இறுதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாரிஸில் தற்போது போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. வடகிழக்கு பாரிஸில் உள்ள பிரபல பள்ளியின் நுழைவு வாயிலில், குப்பைத் தொட்டிகளை குவித்து மாணவர்கள் முற்றுகையிட்டனர். மேலும், பிளேஸ் டி லா ரிபப்ளிக் பகுதியில் பிரம்மாண்ட பேரணி நடத்த திரண்ட மாணவர்களை, தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்தனர். அசாதாரண சூழல் காரணமாக நாடு முழுவதும் 375 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
6,600 பேர் கைது:
போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 6,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர் போராட்டத்துடன் சில அரசியல் குழுக்களும், தொழிற்சங்கங்களும் கைகோர்த்துள்ளதால் பல இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் எச்சரிக்கை:
இச்சம்பவம் குறித்து பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு கண்டனம் தெரிவித்துள்ளார். ‛மாணவர்களின் பாதுகாப்போடு விளையாட முடியாது. வரவிருக்கும் அதிபர் தேர்தலுக்காக, சில அரசியல் தலைவர்கள், மாணவர்களின் கோபத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்' என்று அவர் எச்சரித்துள்ளார்.
Being a student doesn’t give anyone the liberty to take law into his hands. Students’ pros cannot be allowed to destabilise a country. But all over the world opposition parties make use of students to further their ends. Unfortunately bad students, like wet clay can be made to any shape.மேலும்
-
அமெரிக்க தேர்தல் வரை ஈரான் மீது தாக்குதல் நடத்தமாட்டோம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
பிளைதுபாய் பயணிகள் 6 பேருக்கு விருது; இந்திய விமானிக்கு உடல் நலம் தேறியதும் ஜனாதிபதி பதக்கம் வழங்குகிறது இஸ்ரேல்
-
போலி வீடியோக்களுக்கு கடிவாளம்: சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
-
நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன்: எலான் மஸ்க்கை புகழ்ந்த டிரம்ப்
-
டில்லி ஜந்தர் மந்தரில் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு: போலீஸ் கடும் எச்சரிக்கை
-
கோவையில் காட்டுக்குள் சட்ட விரோதமாக செயல்பட்ட 13 ரிசார்ட்டுகளுக்கு பூட்டு