சொந்த தொகுதி மக்களுடன் சந்திப்பு; நேரில் மனுக்களை பெற்ற முதல்வர் விஜய்
சென்னை: பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில், மக்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை முதல்வர் விஜய் பெற்றுக்கொண்டார்.
சென்னை மாதவரம் பால் பண்ணையில் ரூ.2.23 கோடியில் கட்டப்பட்ட ஆய்வக துணைக் கட்டடத்தை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இந்த கட்டடம் அதிநவீன கருவிகளுடன் பால் மற்றும் பால் பொருட்களை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பால் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். சமீப காலமாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் முதல்வர் விஜய் ஆய்வு நடத்தியுள்ளார். இதனால் பால் பாக்கெட் தட்டுப்பாடு தீருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எம்எல்ஏ அலுவலகத்தில்…
பிறகு தனது சொந்த தொகுதியான பெரம்பூர் எல்.எல்.ஏ. அலுவலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு நடத்தினார். அவர் மக்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார்.
வடசென்னை பகுதிகளில் மழைநீர் தேங்குவது, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். தொகுதி மக்கள் அளித்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணுமாறு வலியுறுத்தி உள்ளார்.
மேலும்
-
தாயிற் சிறந்த கோவிலுமில்லை; வெறும் கால்களுடன் 1600 மீட்டர் ஓடிய பெண் வீடியோ வைரல்
-
25 ஆண்டுகளாக பதவியில் நீடிக்க மக்களின் ஆசியே காரணம்; பிரதமர் மோடி பெருமிதம்
-
பழநி நில மோசடியில் திருப்பம்; பெண் ஊழியர், வக்கீல் அதிரடி கைது
-
6574 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., புதிய விதிமுறைகள் இதோ!
-
எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன; ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
பாறை உருண்டு விழுந்தது; காரில் சென்றவர் பலி