தாயிற் சிறந்த கோவிலுமில்லை; வெறும் கால்களுடன் 1600 மீட்டர் ஓடிய பெண் வீடியோ வைரல்

1

-நமது நிருபர்-

ஊர்க்க்காவல் படையில் சேருவதற்கான உடல் தகுதி தேர்வில், 1600 மீட்டர் ஓட்டத்தை, சேலை அணிந்தபடி வெறும் கால்களுடன் ஓடிய பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்த கவிதா குமாரி, கணவரை இழந்தவர்.

வருவாய்க்கு வழி இல்லாத நிலையில், தன் இரு குழந்தைகளையும், வயது முதிர்ந்த மாமனார், மாமியாரையும் காப்பாற்றும் பொறுப்பு அவரிடம் வந்தது. ஊர்க்காவல் படையில் ஆட்தேர்வு நடப்பதாக அறிந்தார் கவிதா. விண்ணப்பம் அளித்தவர், உடல் திறன் தேர்வுக்கு சென்று விட்டார்.

டிராக் சூட், ஷூ போன்ற எதுவும் இல்லாத அவர், வெற்றுக்கால்களில், சேலை அணிந்தபடி 1600 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார். அந்த ஓட்டத்தை 10 நிமிடத்தில் ஓடி முடித்தாலே போதும்; அதை வெறும் 6 நிமிடங்களில் ஓடி முடித்தார் கவிதா. அவர் ஓட்டத்தின் வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் பலரும், கவிதாவை பாராட்டி வருகின்றனர்.

தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஊர்க்காவல் படையில் சேர்ந்து விட வேண்டும் என்ற தன் எண்ணம் தான், தன்னை இந்தளவுக்கு வேகமாக ஓட வைக்கிறது என்கிறார் கவிதா.

'இது குழந்தைகளுக்காக ஓடும் ஒரு தாயின் ஓட்டம்' என்று நெகிழ்ந்து கமென்ட் செய்து பாராட்டுகின்றனர், நெட்டிசன்கள்.

Advertisement