சாலையோரம் சிதறிய மணல் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையில் உள்ள கன்னிகாபுரம் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக எம்.சாண்ட் மணல் சிதறி கிடக்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் – செங்கல்பட்டு சாலையில், கன்னிகாபுரம் வழியாக வாலாஜாபாத், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இச்சாலையில், கட்டுமான பணிக்காக லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் எம்.சாண்ட் மணல், சாலையோரத்தில் சிதறி கிடக்கிறது.

இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, சிதறி கிடக்கும் எம்.சாண்ட் மணலில் சிக்கி, தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், சாலையோரம் சிதறி கிடக்கும் எம்.சாண்ட் மணலை அகற்ற, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement