சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு

ராஜ்கோட்: ரஞ்சி கோப்பை போட்டிக்கான சவுராஷ்டிரா அணிக்கு, 'ஆல்-ரவுண்டர்' ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ரஞ்சி கோப்பை முதல்தர கிரிக்கெட் 92வது சீசன் நாளை துவங்குகிறது. மொத்தம் 38 அணிகள், 135 போட்டிகளில் விளையாடுகின்றன. லீக், 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. ராஜ்கோட்டில் நாளை துவங்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில் சவுராஷ்டிரா, சத்தீஸ்கர் அணிகள் விளையாடுகின்றன.

இப்போட்டிக்கான சவுராஷ்டிரா அணியில் சீனியர் 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இவர், நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு (நவ. 19-23, நவ. 27-டிச. 1) தயாராகும் விதமாக இப்போட்டியில் பங்கேற்கிறார்.

கேப்டனாக ஜெய்தேவ் உனத்கட், விக்கெட் கீப்பராக ஹர்விக் தேசாய் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement