இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-நமது நிருபர்-
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் களம் கண்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், இடைத்தேர்தலில் தவெக சார்பில் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தல், தற்போது இடைத்தேர்தலில் பெற்ற ஓட்டுக்கள் குறித்து ஓர் சிறப்பு அலசல்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேலுக்கு, தொகுதி மக்களிடையே செல்வாக்கு இருப்பது, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே நிரூபிக்கப்பட்டது.
ஆரம்பம் முதலே பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வலுவான முன்னிலையில் இருந்து வந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் களம் கண்ட மரகதம் குமாரவேல் 69,284 ஓட்டுகளை பெற்றிருந்தார்.
தற்போது இடைத்தேர்தலில் அதைவிட அதிகமாக, 74 ஆயிரத்து 48 ஓட்டுக்கள் பெற்றுள்ளார். இவர் 20,040 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். தேர்தல் பிரசாரத்திலும், மரகத குமரவேலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. தற்போது, அவர் திமுக, அதிமுக வேட்பாளர்களை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள், கடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எவ்வளவு, தற்போது இடைத்தேர்தலில் பெற்றுள்ள ஓட்டுக்கள் எவ்வளவு என்பது குறித்து படத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.


அதனைப் பார்த்து, கடந்த சட்டசபை தேர்தலில் திமுக அதிமுக தேவைக்கு பெற்றுள்ள ஓட்டு எவ்வளவு, தற்போது இடைத்தேர்தலில் பெற்றுள்ள ஓட்டுக்கள் எவ்வளவு என்பதை சதவீதத்துடன் அறிந்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே தீர்மானிப்பார்கள்;எலான் மஸ்க்கிற்கு கமல் பதில்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்
Advertisement
Advertisement