நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
ஆக்லாந்து: இந்தியாவுக்கு எதிரான 'டி-20' தொடரில் இருந்து காயம் காரணமாக நியூசிலாந்தின் சாப்மேன், பால்க்ஸ் விலகினர்.
நியூசிலாந்து செல்லவுள்ள இந்திய அணி, 5 'டி-20', 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 'டி-20' தொடருக்கான முதலிரண்டு போட்டிகள் வரும் அக். 22, 24ல் கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கின்றன. மீதமுள்ள போட்டிகள் வெலிங்டன் (அக். 27), ஆக்லாந்து (அக். 30), ஹாமில்டனில் (நவ. 1) நடக்கவுள்ளன.
'டி-20' தொடருக்கான 16 பேர் கொண்ட நியூசிலாந்து அணியில் இருந்து காயத்தால் மார்க் சாப்மேன் (இடது கால் தொடையின் பின்பகுதி), ஜாக் பால்க்ஸ் (வலது இடுப்பு) விலகினர். இவர்களுக்கு பதிலாக 'ஆல்-ரவுண்டர்' ஜோஷ் கிளார்க்சன், வேகப்பந்துவீச்சாளர் பிளேர் டிக்னர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து 'டி-20' அணி: சான்ட்னர் (கேப்டன்), ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், ஜோஷ் கிளார்க்சன், கான்வே, ஜேக்கப் டபி, பெர்குசன், மாட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர்.
மேலும்
-
இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே தீர்மானிப்பார்கள்;எலான் மஸ்க்கிற்கு கமல் பதில்
-
சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!
-
மத்திய அரசு முன்னெச்சரிக்கை: டில்லியில் 24 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடக்கம்