சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மெர்டென்ஸ்
பீஜிங்: சீனாவின் பீஜிங் நகரில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பெல்ஜியத்தில் எல்லிஸ் மெர்டென்ஸ் மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்வியாடெக் 6-7, 3-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு காலிறுதியில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 3-6, 6-7 என, சீனாவின் கின்வென் ஜெங்கிடம் வீழ்ந்தார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் தோல்வி
ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில், ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், போலந்தின் ஹுபர்ட் ஹர்காஸ் மோதினர். இதில் ஜோகோவிச் 4-6, 3-6 என அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 7-6 என, சீனாவின் இபிங்கை வீழ்த்தினார். அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 7-6 என, ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மேயரை தோற்கடித்தார்.
எக்ஸ்டிராஸ்
* புதுச்சேரியில் நடந்த அதிகாரப்பூர்வமற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய 'ஏ' அணி (45.2 ஓவர், 206/10), 69 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா 'ஏ' (49.5 ஓவர், 275/10) அணியிடம் தோல்வியடைந்தது. 2-0 என இந்தியா தொடரை இழந்தது.
* பீஜிங்கில் நடக்கும் டபிள்யு.டி.டி., சீன ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி 0-3 (8-11, 6-11, 3-11) என, தென் கொரியாவின் லிம் ஜோங்ஹூன், ஓ ஜுன்சங் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
* உ.பி., மாநிலம் ஜான்சியில், சீனியர் ஆண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 16வது சீசன் இன்று துவங்குகிறது. பைனல், அக். 21ல் நடக்கவுள்ளது. இதில் பஞ்சாப் அணி 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்குகிறது.
* சென்னையில், வரும் நவ. 2-8 ல் பெண்களுக்கான சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென் 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்குகிறார்.
* எகிப்தில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் ஸ்வப்னில், சரப்ஜோத் சிங், விஜய்வீர் சித்து உள்ளிட்ட 24 பேர் பங்கேற்கின்றனர்.
* இந்தியா வரவுள்ள ஜிம்பாப்வே பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் (அக். 16-20) பங்கேற்கிறது. இம்மூன்று போட்டிகளும் ராய்பூரில் நடக்கவுள்ளன.
* டில்லியில், அடுத்த ஆண்டு ஜன. 9-26ல் புரோ மல்யுத்த லீக் 6வது சீசன் நடக்கவுள்ளது. இதில் உலகின் முன்னணி 86 மல்யுத்த நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும்
-
நடிகர் நானா படேகர் மரணத்தில் மர்மம்; வழக்குப் பதிந்தது கோவா போலீஸ்
-
இந்தியாவின் எதிர்காலத்தை இந்தியர்களே தீர்மானிப்பார்கள்;எலான் மஸ்க்கிற்கு கமல் பதில்
-
சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா: ரஞ்சி கோப்பை போட்டிக்கு தேர்வு
-
இடைத்தேர்தல் Vs சட்டசபை தேர்தல்; மதுராந்தகம் தொகுதியில் பெற்ற ஓட்டு குறித்து ஓர் அலசல்!
-
நியூசிலாந்து வீரர்கள் விலகல்: இந்திய 'டி-20' தொடரில் இருந்து
-
வெளிநாட்டு கம்பெனிக்கு கம்பளம் விரிக்கும் ராகுல்: நேற்று ஒரு பேச்சு, இன்று அது போச்சு!