அமைச்சர் ஆய்வு கூட்டம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் த.வெ.க., ஆட்சி அமைந்த பின்பு முதல் முறையாக துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ. அன்பழகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சதீஷ் பாபு, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுரேஷ், ஆர்.டி.ஓ., சிவஜோதி, அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அமைச்சர் நிர்மல் குமார், சுகாதார பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள், மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு முதலீட்டு நிதி, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார். ஊராட்சி ஒன்றிய அலுவலக சுற்றுச்சுவர்களில் கீழக்குயில்குடி ஊராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்கவும், விபத்தை ஏற்படுத்தும் நிலையிலுள்ள தடுப்புச் சுவர், சாலைகள், குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சீரமைக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
மேலும்
-
தமிழ் மொழி, கலாசாரத்தின் மீது பா.ஜ., தாக்குதல்: தமிழகத்தை தொட விடமாட்டோம் என ராகுல் பேச்சு
-
மக்கள் குறைதீர் முகாம்
-
பூட்டிய வீட்டை உடைத்து கார், நகை, பணம் திருட்டு
-
நவராத்திரி விழா தொடக்கம் வீடு, கோவில்களில் கொலு
-
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய 4 இளைஞர்கள் கைது
-
மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகம்