கலெக்டர் பொறுப்பேற்பு

தேனி: தேனி மாவட்ட கலெக்டராக சிவ கிருஷ்ண மூர்த்தி பொறுப்பேற்றார். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், 2018 பேட்ஜ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். விழுப்புரம் மாவட்ட பயிற்சி சப் கலெக்டர், திருநெல்வேலி மாவட்டம் சேரன் மாதேவி சப் கலெக்டர், திருநெல்வேலி, ஈரோடு மாநகராட்சிகளில் கமிஷனர், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

பொறுப்பேற்ற பின் அவர் கூறியதாவது, தேனி மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வேன். அவர்களின் கோரிக்கைள், மனுக்களுக்கு துரிதமாக தீர்வு காணப்படும் என்றார்.

Advertisement